நேற்றைய மாலைப் பத்திரிகைகளைப் பார்த்தவர்கள் அனைவரும் ராமதாஸின் கூற்றை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டிருப்பார்கள்.
பிரபலமான அந்த மாலை நாளிதழில் பெரிய அளவுகளில் பல வண்ண விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. இவை அனைத்துமே இரு நடிகர்களுக்காக வழங்கப்பட்டிருந்தன.
ஒருவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் டபுள் ரோல் செய்து கொண்டிருக்கும் விஜய்காந்த். மற்றொருவர் மாவட்டம் தோறும் இப்போதே ரசிகர் மன்ற தலைமை அலுவலகம் கட்டிக் கொண்டிருக்கிற விஜய்.
இந்த இரண்டு விளம்பரங்களுமே கட்சிக்காரர்கள் மற்றும் ரசிகர்களின் பெயர்களில் கொடுக்கப்பட்டிருந்தன.
அந்த மாலை நாளிதழில் கால்பக்க வண்ண விளம்பரம் தர பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதுவும் முன் கூட்டியே செலுத்த வேண்டும்.
விஜய்காந்தாவது அரசியலில் இருக்கிறார், ஏதோ ஒரு நம்பிக்கையில் அவரது கட்சி நிர்வாகிகள் அவ்வளவு பணம் செலழித்து விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம்.
ஆனால் விஜய்-
இன்னும் 50 படங்களைக் கூட தாண்டவில்லை. ஆனால் இப்போதே அவருக்கும் தனிக்கட்சி, தனிக் கொடி, எதிர்கால முதல்வர் கனவுகள். (அது சரி... முதல்வராக முழுமையான நடிகராக இருந்தே ஆக வேண்டிய கட்டாயமிருக்கிறதா என்ன!?)
விஜய்யின் விளம்பர டிசைன்களில் இரு தலைவர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று அமரர் எம்ஜிஆர். மற்றொரு 'பெரும் தலைவர்' விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்! கூடவே இப்படி வாசகங்கள்... நேற்று எம்ஜிஆர், இன்று எஸ்ஏசி!
நாளை விஜய்யாம்!
சரி, இந்த விளம்பரங்கள் எதற்காக கொடுக்கப்பட்டன தெரியுமா?
லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் விஜய்காந்தைவிட 4.02 சதவிகிதம் அதிக ஆதரவையும், ரஜினியைவிட 0.02 சதவிகிதம் கூடுதல் வாக்குகளையும் விஜய் பெற்றதை பாராட்டித்தான் இத்தனை ஆர்ப்பாட்டமான விளம்பரங்களும் தரப்பட்டுள்ளனவாம்.
இருப்பது ஒரு முதல்வர் நாற்காலி... ஏற்கெனவே விஜய்காந்த் ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், ஜெயலலிதா, வைகோ, இப்போதைய முதல்வர் கருணாநிதி என (அடடா... ஜே.கே.ரித்தீஷை விட்டுட்டோமே!) இத்தனைப் பேர் அந்த நாற்காலியை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் இப்போது விஜய்யும்!
LINK: http:
No comments:
Post a Comment