பூனை பற்றி படம் எடுத்தால் கூட அது குறுக்கே போகாத மாதிரி பார்த்துக் கொள்வார்கள் தமிழ் சினிமாவில். அப்படி சென்ட்டிமென்ட் நிறைந்த உலகம் இது. இதற்கு விஜய் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி போன்ற படங்களை சத்யம் திரையரங்கில் வெளியிட்டிருந்தார் விஜய். (சிட்டி ரிலீசும் இவரே) ஆனால் அந்த படங்களின் வெற்றியின் சதவீதம், விஜயை பெரும் கவலைக்குள்ளாக்கியது. அதனால் இந்த முறை தனது வில்லு படத்தை தேவி திரையரங்கத்தில் வெளியிடப் போகிறாராம்.
இரண்டு திரையரங்குகளுக்கும் இடையே சில கிலோ மீட்டர்கள்தான் வித்தியாசம் என்பதால், தேவியில் போடும் படங்களுக்கு சத்யத்தில் இடம் இல்லை. சத்யத்தில் போடுகிற படங்களுக்கு தேவியில் இடம் இல்லை. இந்த நீண்ட கால வழக்கப்படி இந்த முறை விஜய் தனது வில்லுவை தேவியில் திரையிடுவதால், சத்யம் தானாகவே ஒதுங்கிக் கொண்டது.
ரஜினி படமாக இருந்தாலும் கூட, ரிலீசுக்கு ஒரு மாதங்கள் முன்போ, அல்லது அவ்வப்போதோ பத்திரிகைளுக்கு படத்தின் ஸ்டில்களை வழங்குவார்கள். இந்த முறை என்ன நினைத்தார்களோ, பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட பிறகும், எந்த பத்திரிகைகளுக்கும் வில்லு படத்தின் ஸ்டில்கள் வந்து சேரவில்லை. அதான் இன்டர்நெட்டில் வெளியாகுதே, எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே? என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
-அர்ஜுன்
No comments:
Post a Comment