தான் முதன் முதலில் இரட்டை வேடங்களில் நடிக்கும் 'அழகிய தமிழ்மகன்' பட ரிசல்டை அறிய ஆர்வமாக காத்திருந்தார் விஜய். ஆனால் படம் தீபாவளிக்கு ரிலீசாவது சந்தேகம் என்கிற அளவுக்கு திடீர் பணப்பிரச்சனை.
தயாரிப்பாளர் அப்பச்சனும், படத்தை வாங்கிய சாய்மீரா நிறுவனமும் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரிடம்போய் உதவிகேட்க, அவரும் கை விரித்துவிட்டார்.
இதனால், வேறு வழியில்லாமல் தனது கையிலிருந்து ஒரு கோடியே 40 லட்சம் கொடுத்து படத்தின் சிக்கலை தீர்த்திருக்கிறார் விஜய். படத்தில் ரிசல்டும் சாதகமாக இருப்பதால் தற்போது மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
Source: http://in.tamil.yahoo.com/Entertainment/Bollywood/0711/10/1071110033_1.htm
No comments:
Post a Comment