Saturday, March 15, 2008

அலை பரப்பும் 'குருவி'

ரஜினிக்கு அடுத்த இடம் விஜய்தான் என்பதை நிரூபிக்கும் விதமாக விஜய் நடித்துள்ள குருவி படத்தின் கேரள விநியோக உரிமை ரூ. 1.50 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.
Vijay and Trisha
தரணி இயக்க, விஜய், திரிஷா நடிக்க உருவாகியுள்ள படம் குருவி. இப்படத்தின் விநியோக உரிமைக்கான விற்பனை தொடங்கியுள்ளது. முதல் போணியை கேரளா செய்துள்ளது. ரூ. 1.50 கோடிக்கு கேரள ரைட்ஸ் போயுள்ளதாம்.

மலையாளத் திரையுலகின் முன்னணி ஹேர் டிரஸ்ஸரும், தயாரிப்பாளருமான மஹி, குருவி படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளாராம். ராயல்டி அடிப்படையில் இந்த விற்பனை நடந்துள்ளது.

தரணியின் படம் ஒன்று கேரளாவில் விற்பனையாகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

மே மாதம் குருவியை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். கேரளாவில் விஜய்க்கு நல்ல ரசிகர் கூட்டம் இருப்பதாலும், அவரது போக்கிரி படம் பெரும் ஹிட் ஆனதாலும் குருவி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கேரளாவில் பெரும் வசூலை வாரிய குறிப்பிட்ட சில படங்களில் போக்கிரியும் ஒன்று. அதேபோல தமிழகத்தில் சரிவர போகாத அழகிய தமிழ் மகன் கேரளாவில் பரவாயில்லை என்ற அளவுக்கு போனது.

குருவி படத்தின் தயாரிப்பாளரான, அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, இந்த விற்பனை குறித்து சந்தோஷம் தெரிவித்துள்ளார். படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நல்ல விலை கூறி பலரும் அணுகியிருக்கிறார்களாம். இருப்பினும் தமிழகம் முழுவதும் படத்தை சொந்தமாகவே திரையிட திட்டமிட்டு வருகிறாராம் உதயநிதி.

படத்தின் சர்வதேச உரிமையை ஏற்கனவே ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி விட்டது நினைவிருக்கலாம். இந்த நிறுவனம் கொடுத்த விலை, படத்தின் பட்ஜெட்டுக்கு சமமாம்.

Source : Thatstamil.com

No comments: