Thursday, May 08, 2008

பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் 'குருவி'!

வியாழக்கிழமை, 8 மே 2008 ( 16:49 IST )

'குருவி'க்கு விமர்சனங்கள்தான் சாதகமாக இல்லை என்றாலும், அதிரடி ஒபனிங் மூலம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.

'கில்லி' போல் இல்லை என்று விஜய் ரசிகர்கள் உள்பட பல தரப்பும் கூறி வந்தாலும், சென்ற வார இறுதியில் ரூ.1 கோடியே 80 லட்சங்களுடன் சென்னையில் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றுள்ளது 'குருவி'.

இரண்டாம் இடத்திலுள்ள ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமணியம்', பதினெட்டே கால் லட்சங்களை ஈட்டியுள்ளார்.

தனுஷின் 'யாரடி நீ மோகினி', வார இறுதியில் பதிமூன்று லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.

ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு, 'சிவாஜி'யின் (25 காட்சிகள்) சாதனையை முறியடித்த 'குருவி', கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ.37 லட்சத்தை வசூல் செய்தது. இதன்மூலம், முதல் இருதின வசூலில் 'பில்லா'வை முந்தியது.

No comments: