Friday, May 02, 2008

கேரளாவில் உயரப் பறக்கும் 'குருவி'

விஜய் நடிப்பில் மே 3ம் தேதி வெளிவரவிருக்கும் 'குருவி' பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேரளாவில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.
விஜய்

கேரளாவில் இப்படம் ஒரே நேரத்தில் 60 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. குறிப்பாக கொச்சி, திருவனந்தபுரம் போன்ற பெரிய நகரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு தியேட்டர்களில் 'குருவி' வெளியாக இருக்கிறது.

மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர்களின் படங்களுக்குத் தான் இதுபோன்ற வரவேற்பை அங்கு காண முடியும். தற்போது அவர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் வகையில் 'கில்லி'யின் ராஜ்ஜியம் அங்கு விரிந்துள்ளது.

ஏற்கனவே விஜய் நடித்த 'போக்கிரி' கேரளாவில் அமோக வெற்றியை பெற்றது. அதே நம்பிக்கையுடன் தற்போது கேரளா பக்கம் 'குருவி' திரும்பியுள்ளது.

No comments: