விஜய்யின் சூப்பர் ஹிட் படமான போக்கிரிக்கு மலையாளத்து மாத்ருபூமி இதழ் வழங்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
மாத்ருபூமி இதழும், பி.எஸ்.எஸ். லிமிட்டெட் நிறுவனமும் இணைந்து வழங்கும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான விருதுகளில் விஜய்யின் போக்கிரியும் இடம் பிடித்துள்ளது.
தமிழில் போக்கிரி படம் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. அப்படத்தை இயக்கிய பிரபுதேவா சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈ படத்தில் சிறப்பாக நடித்த நயனதாரா சிறந்த நடிகையாக தேர்வு பெற்றுள்ளார்.
போக்கிரி படத்திற்கு ரூ. 1 லட்சம் பரிசும், மற்ற விருதுகளுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.
மாத்ருபூமி குழும நிர்வாக ஆசிரியர் பி.வி.சந்திரன் இந்த விருதுகள் குறித்து அறிவித்தார்.
கொச்சியில் வருகிற 18ம் தேதி நடைபெறும் விழாவின்போது விருதுகள் வழங்கப்படும்.
விஜய் படம் ஒன்றிற்கு கேரளாவில் விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment