Thursday, April 03, 2008

மே 10ல் சிறகை விரிக்கிறது 'குருவி'

இப்போதுதான் படத்துக்கு பூஜை போட்ட மாதிரி இருக்கிறது. அதற்குள் பெரும்பாலான காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறது 'குருவி' டீம்.

இயக்குனர் தரணியின் படங்களை போலவே, அவரது பட வேலைகளும் ரொம்ப ஸ்பீடாக இருக்கும் என்பதற்கு இப்படமே சாட்சி.

ஆக்சனுக்கு விஜய், இளமைக்கு த்ரிஷா, விறுவிறுப்புக்கு தரணி என 'குருவி'க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ள நிலையில், மே 10ல் படம் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பல படங்களை உடனடி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் பல படங்களின் ரிலீஸ் தள்ளிபோகலாம். காரணம், 'குருவி' முன் வேறு எந்த படமும் நிக்க முடியாது என்ற நம்பிக்கைதான்.

Source : Yahoo News

No comments: