தமிழ் புத்தாண்டு தினத்தை சித்திரை ஒன்றாம் தேதிக்கு மாற்றியிருப்பதால் அவசரப்பட்டு ஒரே தேதியில் ரிலீஸ் ஆக துடிக்காமல் ஏப்ரல் மாதம் முழுவதும் படங்கள் வெளிவர இருக்கின்றன. ஆனால், இந்த புத்தாண்டு தின மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் விஜயகாந்த் தனது அரசாங்கம் படத்தை ஏப்ரல் 11-ந் தேதி ரிலீஸ் செய்யப் போகிறாராம்.ஏப்ரல் 4-ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட யாரடி நீ மோகினி அன்று திரைப்பட அமைப்புகள் உண்ணாவிரதம் இருப்பதாலும், திரையரங்குகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதாலும் மறுநாள் வெளியாக இருக்கிறது. நேபாளி ஏப்ரல் 11-ந் தேதியும், அறை எண் 305-ல் கடவுள் ஏப்ரல் 12-ந் தேதியும் ரிலீஸ் ஆகவிருக்கிறது.
குருவியோடு மோத எந்த படங்களாவது விரும்புகிறதா? அதுதான் இல்லை. பிழைக்கத் தெரிந்தவர்கள்!
Source Link
No comments:
Post a Comment